கன்னியாகுமரி

ஃபானி புயல் காரணமாக கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நிறுத்தம்…

கன்னியாகுமரி:-

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக திகழும் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக வருகை தருகின்றனர். இங்கு வருபவர்கள் கடல் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுர் சிலை ஆகியவற்றை சுற்றுலாத்துறையின் மூலம் இயக்கப்படும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகுகளில் சென்று பார்வையிடுகின்றனர்.

இந்நிலையில், குமரி கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் படகு போக்குவரத்து இன்று நிறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகி அதிதீவிர புயலாக மாறியுள்ள ஃபானி புயல் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றமாக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.