இந்தியா மற்றவை

ஃபிட் இந்தியா இயக்கம் பிரதமர் துவக்கி வைத்தார்…

புதுடெல்லி:-

இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.கடந்த 2012-ம் ஆண்டு முதன்முறையாக ஆகஸ்ட் 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது.

இந்நாளில் குடியரசு தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் பிரதமர் மோடி, பிட் இந்தியா எனும் இயக்கத்தை துவக்கி வைத்தார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில் பாஜக தொண்டர்கள், நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.