தமிழகம் மற்றவை முக்கிய நிகழ்வுகள்

அக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..

மிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டை விலக்கிக்கொள்வதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:-

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு அக்.7 அன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. தமிழகத்தின் சில இடங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பில்லாததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்வதாக வானிலை ஆய்வு மைய்யம் தெரிவித்துள்ளது.நாளை அக்.7-ம் தேதி மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட அதி கனமழை வாய்ப்பு தற்போது இல்லாத நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. தென் கிழக்கு அரச்பிக்கடலில் தற்போது நிலவிக்கொண்டி ருக்கின்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தெற்கு அந்தமான் பகுதியில் தற்போதுள்ள வளிமண்டல சுழற்சி காரண மாகவும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு 8-ம் தேதி எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்கள் வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் தென்கிழக்கு அரபி கடல், லட்சதீவு, குமரி கடல் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம்.கடந்த 24 மணி நேரத்தை பொருத்த வரையில் அதிகபட்சமாக காரைக்கால் மாவட்டத்தில் 12 செ.மீ மழையும், விழுப்புரத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதுதென்கிழக்குப் பருவமழையும் படிப்படியாக விலகி வருகிறது, இந்த சூழ்நிலையில் வடகிழக்கு பருவ மழை வரும் 8-ம் தேதி துவங்கும்”.

இவ்வாறு வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.