தற்போதைய செய்திகள்

அடித்தட்டு மக்களின் வாழ்வு வளம்பெற கழக வேட்பாளர்களுக்கு ஆதரவு தாரீர் – கழகத்தினருக்கு, அமைச்சர் க.பாண்டியராஜன் வேண்டுகோள்…

திருவள்ளூர்:-

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி சார்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், தலைமையில் பூந்தமல்லியில் நடைபெற்றது,

இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும்தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது :-

நாடாளுமன்ற தேர்தல் கழகத்திற்கு மிக முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தலில் நாம் அடையும் வெற்றி வரும் இரண்டு ஆண்டுகளில் அம்மாவின் அரசு இன்னும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி அடித்தட்டு மக்களின் வாழ்வு வளம்பெற எந்த இடையூறுகளும் இல்லாமல் கழக அரசு வீறுநடை போடும்.

இவ்வாறு கூஅமைச்சர் க.பாண்டியராஜன் பேசினார்.

கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பூந்தமல்லி தொகுதி பொறுப்பாளருமான ரா.மணிமாறன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், மாணவரணி மாவட்ட செயலாளர் எஸ்.ராகேஷ், ஜாவித் அகமது ரவிச்சந்திரன், தேவேந்திரன் அந்தமான் முருகன், ரவீந்திரநாத், சங்கர், பூந்தமல்லி முன்னாள் தலைவர் பூவைஞானம், பா.ம.க நகர செயலாளர் ஆ.பொன்னுசாமி, பத்மநாபன், ரவீந்திரநாத், ,ஹரிகுமார், மணி, சார்லஸ் , சண்முகம், ரவீந்திரன், மகேஷ், ஜீவா சுப்பிரமணி நடராஜன் கோபிநாத்,சாப்பி, ரமேஷ் பாபு, அல்லா அபாகஸ், ஹரி பத்மநாபன் உமா சந்திரன் சல்மான் ஜாவித், ராஜேஸ்வரி புரட்சி பாரதம் கட்சி நகர செயலாளர் மேகநாதன் பிரபாகர் ஜெயராஜ் பிஜேபி கட்சி நகர செயலர் சரவணக்குமார் காளியப்பன், த.மா.கா நிர்வாகிகள் தேவராஜ், திருவேங்கடம் பூபதி, ச.ம.க நிர்வாகி சேவியர், புதியநீதிக்கட்சி நிர்வாகி பைரவி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.