தமிழகம்

அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை:-

தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா, கேரளா பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளதால், தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.