இந்தியா மற்றவை

அத்வானி 92வது பிறந்தநாள் : பிரதமர் மோடி நேரில் வாழ்த்து.

புது தில்லி:

பாஜகவின் மூத்தத் தலைவர்களின் ஒருவரான எல்.கே. அத்வானியின் 92வது பிறந்த தினம் இன்று. அழகிய மலர்க்கொத்துடன் இன்று காலை அத்வானியின் வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

1927ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கராச்சியில் பிறந்தார் அத்வானி. இந்தியாவில் இருந்து கராச்சி பிரிக்கப்பட்ட போது, அவரது குடும்பம் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது.

பாஜகவை நிர்மாணித்தவர்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியும், அத்வானியும் முக்கியமானவர்கள், மேலும், பாஜகவின் தலைவராக அதிக காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையையும் அத்வானி கொண்டிருக்கிறார்.

ஐந்து முறை மக்களவை உறுப்பினராக இருந்த அத்வானி, கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார் அத்வானி.