உலகச்செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதன்முறையாக வரும் 22ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வாஷிங்டனில் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மிகுந்த முரண்பாடுகள் நிலவும் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி,போன்றவை உருவாக இந்தப் பேச்சுவார்த்தையில் முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதமே அமெரிக்கா வரும்படி இம்ரான் கானுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்ததாகவும் பட்ஜெட் கூட்டத் தொடர் காரணமாக அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.