தற்போதைய செய்திகள்

அமைச்சருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திடீர் சந்திப்பு – பிரச்சார பணிகள் குறித்து ஆலோசனை…

திருவாரூர்:-

அமைச்சர் ஆர்.காமராஜூடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்து பிரச்சார பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்பு அடைந்து வருகிறது. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் தீவிர களப்பணியில் தங்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சரும் அ.இ.அ.தி.மு.க திருவாரூர் மாவட்டச் செயலாளருமானஆர்.காமராஜை தே.மு.தி.க நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

இந்த நிகழ்வின்போது தேமுதிக திருவாரூர் மாவட்டச் செயலாளர் எம் சண்முகராஜ், நாகை தெற்கு மாவட்ட செயலாளர் கே.வைரவநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் என்..முத்தையா, மாவட்டத் துணை செயலாளர் முகம்மது மொகைதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜபாண்டியன் திருவாரூர் நகர செயலாளர் சதீஷ்குமார், திருவாரூர் ஒன்றியச் செயலாளர் கே.ஜி. திருமுருகன், ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளும் அமைச்சர் இரா.காமராஜை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது த.மா.கா மாவட்டத் தலைவர் குடவாசல் எஸ்.தினகரன், மாவட்டத் துணைத்தலைவர் எஸ்.இராமகிருஷ்ணன், மாவடட இளைஞரணி தலைவர் வடுவூர் சங்கர், நீடாமங்கலம் வட்டாரத்தலைவர் சந்திரசேகர், மன்னார்குடி வட்டாரத் தலைவர் முனியநாதன், மாவட்டச் செயலாளர் சிங்கு.பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது போது நாகை நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் வெற்றிகுறித்தும், தேர்தல் பிரச்சாரம் மற்றும் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.