தற்போதைய செய்திகள்

அம்மாவின் பிறந்தநாள் விழாவை பெண்கள் எழுச்சி தினமாக கொண்டாட மகளிரணி தீர்மானம்…

சென்னை

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாள் விழாவை பெண்கள் எழுச்சி தினமாக கொண்டாடுவது என கழக மகளிரணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கழக மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கழக மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்ஙதியானந்த் எம்.பி. தலைமை வகித்தார். கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வி.சரோஜா, கழக மகளிர் அணி இணை செயலாளர் சக்தி கோதண்டம், கழக மகளிர் அணி துணை செயலாளரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி, கழக மகளிர் அணி துணை செயலாளர்கள் கே.எம்.கலைச்செல்வி, டி.சகுந்தலா, டாக்டர் அ.அழகு தமிழ்செல்வி, எல்.ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் செல்வி ராமஜெயம், ஈரோடு மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா பரமசிவம், அரியலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜீவா அரங்கநாதன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். கழக அமைப்பு செயலாளரும், மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சருமான டி.ஜெயக்குமார், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளருமான பா.வளர்மதி, கழக அமைப்பு செயலாளர் ஜெ.சி.டி.பிரபாகர், அண்ணா தொழிற்சங்க பேரவைத் தலைவர் தாடி ம.ராசு, கழக அமைப்பு சாரா ஒட்டுநர்கள் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், கழக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ம.சக்தி நன்றி கூறினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

உலகே வியக்கும் வண்ணம் வாழ்வில் தனக்காக வாழாமல் மக்களுக்காக வாழ்ந்த உலகம் போற்றும் உன்னத தலைவி பசித்தோர் முகம் பார் பரம்பொருள் கிட்டும் என்ற வாக்கிற்கிணங்க வாரி கொடுத்த பாரி வள்ளல் மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் காலம் கருணை பெட்டகம் கழநி உழவர் மகனுக்கும், மடிகணினி தந்த மாசில்லா தலைவி பெண் இனத்தின் காவல் அரண் வீரத்தின் விளை நிலம் தைரியத்தில் சிங்கம் நம் தாய் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவினை பெண்கள் எழுச்சி தினமாக கொண்டாட வேண்டும் என கழக மகளிர் அணி தீர்மானிக்கிறது.

உலகில் பல சாம்ராஜ்ஜியங்கள் உருவாக காரணம் பெண். பெண் இனத்தினை வீர மங்கையாக தோன்றி தனக்கென்று ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி முகாம் தெரியாத பெண்களுக்கு முகவரியை தந்த எங்களின் உயிர் மூச்சே, கழகத்தின் சுவாசமே, கருணையின் கடலே, கழகத்தின் காவல் தெய்வமே, இன்றும் நம்மை வழி நடத்துகின்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்த தின விாாவை மாவட்டம், ஒன்றியம், நகரம், ஊராட்சி, கிளை கழகங்கள் தோறும் மக்கள் பயன்பெறும் வகையில் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பிப்பது என்றும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் திருஉருவ படத்தை அலங்கரித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொடியினை ஏற்றி விழாவினை சிறப்பாக நடத்துவது என கழக மகளிர் அணி தீர்மானிக்கிறது.

தீய எண்ணம் படைத்தவர்கள் போலி திராவிடம் பேசுபவர்கள் மத்தியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால் தீயசக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட கரணாநிதி கும்பலால் தொடர்ந்து வரும் தொல்லைகளுக்கு மத்தியில் துரோகிகளின் சூழ்ச்சியை வென்று புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் கழகத்தையும், கழக அரசையும் கட்டிக்காத்து வருகின்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் கரத்தை வலுப்படுத்தி இயக்கத்தையும், அரசையும் பாதுகாக்க எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்போம் என்று கழக மகளிர் அணி தீர்மானிக்கிறது.

ஏழை பங்காளர், எளியோரின் முதல்வர் மக்கள் பலன்பெறும் மராமத்து திட்டம் தந்த உழவர் திருமகன், உழைப்பால் உயர்ந்த உத்தமர், அம்மாவின் வழியில் கழக அரசின் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் கிள்ளி கொடுப்போர் மத்தியில் பொங்கல் பரிசாக ரூ.1000 அள்ளிக் கொடுத்த அம்மாவின் அன்புத்தம்பி எடப்பாடியாைரை கழக மகளிர் அணி, தமிழ் சமூகத்தின் சார்பில் நன்றி உணர்ாவோடு பாராட்டி மகிழ்கிறது.

பாட்டாளியின் உழைப்பை உறிஞ்சிய லாட்டரி சீட்டை ஒழித்து எளியோர் வாழ்வில் ஏற்றம் கண்ட ஏழைகளின் ஒளிவிளக்கு உலகம் போற்றும் ஒப்பற்ற தாய் நம் தலைவி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் நம் தாய் மண் மாசுபடுவதை தடுப்பதற்கு நச்சு அரக்கன் நெகிழியை தடை செய்து இது அம்மாவின் அரசு என்று நிரூபித்தும், தமிழ் மண்ணை பாதுகாத்த மண்ணின் மைந்தர்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கழக மகளிர் அணி தமிழக மக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கிறது.

இந்தியத் திருநாட்டின் முதன்மையான பத்திரிகையான இந்தியா டுடே நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் அரசை நாட்டிலேயே தலைசிறந்த சட்டம், ஒழுங்கு பராமரித்தலுக்கான முதல் மாநிலம் என்ற விருதினையும், சுற்றுலா மேம்பாட்டிற்கான கோவை ஆர்.எஸ்.புரம் பி.2. காவல் நிலையம் முதலிடமும், சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் 5-வது இடமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றமைக்கும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் லட்சிய திட்டமான விஷன் 2023 இலனக்கை நோக்கி தமிழகத்தில் தொழில் புரட்சி ஏற்படுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களை அழைத்து வந்து இரண்டாம் உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ரூ.3.4 லட்சம் கோடி முதலீட்டை பெற்றும், இதன் மூலம் 10.5 லட்சம் மக்கள் நேரடி வேலைவாய்ப்பும், மேலும் பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கும் கழக அரசின் காவலர்கள் முதலமைச்சர் எடப்பாடியாரையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் கழக மகளிர் அணி தமிழக மக்கள் சார்பில் பாராட்டுகிறது.

எளியோர்க்கான இயக்கமாக உருவாகி இந்தியத் திருநாட்டில் மூன்றாவது பேரியக்கமாக வளர்ந்து, இயக்கத்தின் காவல் அரணாக திகழ்ந்த நிரந்தர பொதுச்செயலாளர் இதயதெய்வம் அம்மாவின் தெய்வீக நல்லாசியுடன் இயக்கத்தையும், அரசையும் கட்டிக்காத்து வருகின்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் கழகம் 100 சதவிகித வெற்றி பெற அயராது உழைத்து கழக வேட்பாளர்களை 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறச் செய்வோம் என கழக மகளிர் அணி சமதமேற்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.