ஈரோடு

அம்மாவின் வழியில் முதலமைச்சர் திட்டங்களை செயல்படுத்துகிறார் – கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பாராட்டு

ஈரோடு

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செயல்படுத்துகிறார் என்று ேக.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பாராட்டியுள்ளார்.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மூலம் பயன்பெற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு ஆனந்தம் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சட்டமன்ற அவைக்குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி நல்லாட்சி நடத்தி வருகிறார். அம்மாவின் அரசு பொதுமக்களின் மீது அக்கறை கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடிமராமத்து பணி மூலம் தமிழகம் முழுவதும் ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. அம்மா ஆட்சியில் தான் மக்கள் நலனுக்காக திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களின் வரிப் பணம் மக்களுக்கே செல்ல வேண்டுமென திட்டங்களை தீட்டி நலத்திட்டங்களை அம்மாவின் அரசு வழங்கி வருகிறது. அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காத்து வருகிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற்றது. இதன் பின்னர் தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் எடுபடவில்லை. முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் மூலம் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அம்மாவின் அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று மக்கள் வாழ்வாங்கு வாழவேண்டும். அம்மாவின் அரசுக்கு பொதுமக்கள் என்றும் தங்கள் நல் ஆதரவை வழங்க வேண்டும்.

இவ்வாறு கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் கே.சிபழனிசாமி, ஆர்.ஜெகதீசன், கேசவமூர்த்தி, கோவிந்தராஜன், முருகுசேகர், மனோகரன், ஜெயராஜ், பகுதி அவைத்தலைவர் எஸ்.டி.தங்கமுத்து, முன்னாள் பேரூராட்சி தலைவர் ரா.வரதராஜன், ஊராட்சி கழக செயலாளர்கள் மேட்டு நாசுவம்பாளையம் எஸ்.மகேஸ்வரன், கூரபாளையம் கணேஷ், கதிரம்பட்டி சுப்பிரமணி, பி.பி.கே.மணிகண்டன், தாமோதரமூர்த்தி, எம்.ஜி.பழனிசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் பேரோடு பெரியசாமி, தாமோதரன், ராசு, எஸ்.எம்.சி.சண்முகம், ராமசாமி, அக்ரஹாரம் கருப்பணன், கணேசன், கண்ணன், காமராஜ், சத்தியமூர்த்தி, ஜீவா ரவி, ரகுநாதன், கே.ஆர்.பழனிசாமி, செல்வமணி, ஜீவா, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.