கன்னியாகுமரி

அம்மா பிறந்தநாளில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் – கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியக் கழகம் தீர்மானம்…

கன்னியாகுமரி:-

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு கோவில்களில் அன்னதானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் தோவாளை ஒன்றியக் கழகக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் தோவாளை ஒன்றியத்தில் கழக நிர்வாகிகள் கூட்டம் தோவாளை வடக்கூர் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளரும் ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவருமான எஸ்.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் அய்யப்பன் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட ஆவின் பெருந்தலைவருமான எஸ்.ஏ.அசோகன் கலந்து கொண்டு பேசினார்.

இக்கூட்டத்தின் போது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் 24-2-2019 அன்று ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், தோவாளை கிருஷ்ணசுவாமி கோவில் ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்குவது, அம்மா அரசு மேலும் சிறப்பாக செயல்பட சிறப்பு பிரார்த்தனை செய்வது, அம்மாவின் திருவுருவ படத்தை தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அலங்கரித்து வைத்து மலர்தூவி வணங்கி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, இறச்சகுளம் சந்திப்பில் கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து சொல்வது, பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தோவாளை ஒன்றிய கழகத்திற்கு புதிய அலுவலகம் திறப்பது, தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள் பேரூராட்சி செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கு காப்பீடு திட்டம் தோவாளை ஒன்றிய கழகத்தின் சார்பில் வழங்குவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு அவர் பிறந்த ஊரான தேரூரில் மணிமண்டபம் கட்டுவதற்கு உத்தரவிட்டு 1 கோடி ரூபாய் வழங்க ஆணை பிறப்பித்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, நிதிஒதுக்கீடு செய்ய உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், கழக அமைப்பு செயலாளருமான என்.தளவாய்சுந்தரம், சட்டமன்றத்தில் இதற்கான முன்வடிவு கொண்டு வந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இணைச்செயலாளர் லதா ராமச்சந்திரன், துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ. ராஜன், துணைச்செயலாளர் பாக்கியலெட்சுமி, பொருளாளர் ஆர்.ஜே.கே.திலக், ஒன்றிய இணை செயலாளர் ரமணி, பொருளாளர் தென்கரை மகாராஜன், மாவட்ட பிரதிநிதிகள் பாலகிருஷ்ணன், அப்துல்ரகுமான், பேரூர் கழக செயலாளர்கள் மாடசாமி, முகமதுஷாபி, முத்துராஜ், ஐயப்பன், ஊராட்சி கழக செயலாளர்கள் நாகராஜன், குமாரசுவாமி, மகராஜன், வேலாயுதபெருமாள், தெள்ளாந்தி மணிகண்டன், சாஸ்தான் குட்டி பிள்ளை, ஐயப்பன், அருணாசலம், சிவராமன், வேலப்பன், அருணாசலம், வைகுண்டம், முத்துசுவாமி, மகாதேவ பிள்ளை, ரவி, மாணிக்கவாசகம், வடிவேல், அணிச் செயலாளர்கள் ஜெயசீலன், சுகுமாரன், நாகர்கோவில் நகர அவைத்தலைவர் விக்ரமன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் இ.என்.சங்கர், துணைச்செயலாளர் ரெயிலடி மகாதேவன், மாவட்ட பேரவைதலைவர் சாம்ராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் ஆறுமுகம், இலக்கிய அணி துணைச் செயலாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தேவாளை ஊராட்சி செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.