தற்போதைய செய்திகள்

அம்மா பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் முடிவு

திருவண்ணாமலை

புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடத்தி ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகம் முடிவு செய்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடுவது குறித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் திருவூடல் தெருவில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை வகித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் ஊராட்சிகள், கிளைக்கழகம், ஒன்றிய கழகம், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பிற அணிகள் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்

மேலும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். மாணவ,மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை வழங்கி அம்மாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன்பேசினார்.

இக்கூட்டத்தில் அம்மாவின் பிறந்த நாளையொட்டி மாவட்ட, ஒன்றிய கழக நகர கழக மற்றும் வட்ட கழக சார்பில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு, அன்னதானம் வழங்கிட வேண்டும். கிராமப்புறங்களில் கழக கொடியேற்றி ஆலயங்களில் சிறப்பு வழிபாடு செய்திட வேண்டும்.அன்று ஆயிரம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றும், நகர, ஒன்றிய, வார்டுகள் தோறும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் கழக விவசாயப் பிரிவு மாநில செயலாளரும், மாவட்ட ஆவின் ஒன்றிய பெருந்தலைவரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட இணைச்செயலாளர் அமுதா அருணாச்சலம், மாவட்ட பொருளாளர் நைனாக்கண்ணு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வனரோஜா, அம்மா பேரவை செயலாளர் பீரங்கி வெங்கடேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் டிஸ்கோ குணசேகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் சத்திய சிவகுமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.