மதுரை

அம்மா பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் பரிசு – மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தீர்மானம்

மதுரை

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்க மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- 

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர பேரூராட்சி, பகுதிகளில் உள்ள வார்டுகள் மற்றும் கிளைகழகங்களில் அம்மாவின் திருஉருவ படத்தை வண்ண மலர்களால் அலங்கரித்து கழக கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்குவது, பிப்ரவரி 24-ந் தேதி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் பரிசாக வழங்குவது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்குவது, இலவச மருத்துவமுகாம், ரத்ததான முகாம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழகத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தான் மிக சிறப்பாக கொண்டாடியது என்ற அளவுக்கு கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனக்கு பின்னால் கழகம் 100 ஆண்டுகள் தமிழகத்தில் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா சட்டசபையில் சூளுரைத்தார். அம்மாவின் அந்த லட்சிய முழக்கத்தை நனவாக்கும் வகையில் இரவு, பகல் பாராது உழைத்து கழகத்திற்கும், அம்மா அரசிற்கும் அழியா புகழை பெற்று தந்த சேலத்து சிங்கம், இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், முதலமைச்சருக்கும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் துணைமுதலமைச்சருக்கும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் கோடான கோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறது

பொய்யை மட்டும் மூலதனமாக வைத்துக்கொண்டு அதிகார பசியால் நாள்தோறும் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து அம்மாவின் அரசுக்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்தால் மக்கள் ஆதரவுடன் ஸ்டாலினுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று சூளுரை ஏற்கிறது

ரூ.1000 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி, மற்றும் மருத்துவக் கல்லூரியை சேலம் மாவட்டம் தலைவாசலில் தனது பொற்கரங்களால் திறந்து வைத்து தமிழகத்தில் வெண்மை புரட்சியை உருவாக்கிய முதலமைச்சருக்கு இக்கூட்டம் கோடான கோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

வருகின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கழக அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துக்கூறி தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்து 100 சதவிகிதம் வெற்றியை பெற்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் வரலாறு படைத்தது என்ற சகாப்தத்தை உருவாக்க சூளுரை ஏற்போம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.