பெரம்பலூர்

அம்மா பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் நலத்திட்ட உதவி – ஆர்.பி.மருதராஜா எம்.பி, இரா.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ வழங்கினர்…

பெரம்பலூர்:-

அம்மா பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் நடைபெற்ற விழாவில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை ஆர்.பி.மருதராஜா எம்.பி, இரா.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர்.

பெரம்பலூர் மேற்கு வானொலி திடல், பழைய நகராட்சி அலுவலகம் அருகில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இக்கூட்டத்தில் நகர செயலாளர் ஆர். இராஜபூபதி தலைமை தாங்கினார்.

பெரம்பலூர் ஒன்றிய செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.பி மருதராஜா, மாவட்ட மாணவரணி செயலாளரும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், தலைமைக் கழக பேச்சாளர் தனசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாணவரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் என்றால் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நாளாக தான் இருக்கும் அது போலஇந்த ஆண்டும் எளம்பலூரில் உள்ள முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு எவர்சில்வர் தட்டு, டம்ளர், சேலை, வேட்டி, போர்வை மற்றும் அறுசுவைு உணவு இலவசமாக வழங்கப்பட்டது. ஆலத்தூர் ஒன்றியம், வேப்பந்தட்டை ஒன்றியம், வேப்பூர் ஒன்றியம், செந்துறை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் அறுசுவையுடன் கூடிய அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அம்மா மறைந்தாலும் அவரது புகழ் ஒருபோதும் மறையவில்லை. புரட்சித்தலைவி அம்மாவின் மகளிர்க்கான திட்டங்களான திருமண உதவி தொகையுடன் கூடிய தாலிக்குதங்கம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, குழந்தை பிறந்த பிறகு அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு இலவசமாக சோப்பு, பவுடர், மெத்தை, கிலுகிலுப்பை, மாணவ மாணவிகள் படிப்பதற்கு, சீருடை 3 செட், ஸ்கூல் பேக், சாமண்ட்ரி பாக்ஸ் , காலணி, வளர் இளம்பெண்களுக்கு நாப்கின், அங்கன்வாடியில் ஆங்கிலவழிக் கல்வி முறை, கருவறை முதல் கல்லறை வரை அனைத்து திட்டங்களும் தந்த ஒரே முதலமைச்சர் அம்மா மட்டுமே.

பெரம்பலூர் நகர் முழுவதும் ரூ. 20 கோடியில் தார்சாலை, பெரம்பலூர் அரசு மருத்துவமனை அடிபடை கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்து சென்று அரசு மருத்துவமனைக்கு அருகிலுள்ள இந்து அறநிலையத்துறைக்கு (பெருமாள் கோவிலுக்கு) சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திட ரூ12 கோடி மதிப்பீட்டில் மூன்று தளம் கொண்ட தரம் உயர்த்தப்பட்ட அனைத்து வகை சிகிச்சையும் பெறக்கூடிய வகையில் மருத்துவமனை கட்டட பணிகளுக்கு ரூ. 8 கோடி, அதி நவீன சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.4.கோடி, துறைமங்கலம் பகுதியில் நகர்புற மருத்துவமனை ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு, அதனுடன் கூடிய ரூ.1000 வழங்கப்பட்டது. தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணை பிறப்பித்துள்ளனர்,

இவ்வாறு இரா.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ பேசினார்.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.பி.மருதராஜா பேசியதாவது;-

அரியலூரில் இருந்து தாத்தையங்கார் பேட்டை வரை ரயில்வே பாதை அமைக்க நிலஆர்ஜிதம் செய்யும் பணிக்கு ரூ. 16 கோடியே 25 லட்சம் ஒதுக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. மத்திய அரசிடம் வலியுறுத்தி பெரம்பலூர் பகுதிக்கு கேந்திரா வித்யாலயா பள்ளி புதிய கட்டிடம் ரூ.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. வீடு, நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு ரூ 45 கோடியில் 515 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. முதல்வராக இருந்த கருணாநிதி இந்தியை கடுமையாக எதிர்த்தார். ஆனால் தனது பேரன் தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக ஆன போது சிறு வயதில் அமைச்சராக தகுதி என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு என் பேரனுக்கு நன்றாக இந்தி தெரியும் என்று பதிலளித்தார். இந்தி கற்ற வட மாநிலத்தவர்கள் இந்திய ரயில்வே துறையில் பணியமர்த்தப்படுகிறார்கள். இப்படியெல்லாம் தமிழக மக்களை வஞ்சித்தவர் கருணாநிதி. அவர் வழியில் வந்த அவரது மகன் மு.க.ஸ்டாலின் ஜப்பான் முதல்வர் என்று உளறுகிறார்.

இவ்வாறு ஆர்.பி.மருதராஜா எம்பி பேசினார்.