திருவண்ணாமலை

அம்மா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி – தூசி கே.மோகன் எம்.எல்.ஏ வழங்கினார்…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் மேற்கு ஒன்றியம் சார்பில் கொரைக்கோட்டை கிராமத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொதுகூட்டத்தில் 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தூசி.கே.மோகன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் மேற்கு ஒன்றியம் சார்பில் கொரக்கோட்டை கிராமத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தெள்ளார் மேற்கு ஒன்றிய செயலாளர் கொரக்கோட்டை வி.தங்கராஜ் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ பேசியதாவது;-

அம்மா அரசு அறிவித்த பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குதல், விலையில்லா மடிகணினி வழங்குதல், பெண்களுக்கு தாலிக்கு தங்கம். வழங்கும் திட்டம், கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை, பிறந்த குழந்தைகளுக்கு அம்மா பரிசு பெட்டகம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கியில் கடனுதவி, அம்மா வழியில் ஆட்சி செய்யும் முதல்வர் துணைமுதல்வர் ஆகியோர் அம்மா விட்டு சென்ற பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.

பொங்கல் பரிசாக குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 1000 ரூபாய் தந்து தமிழக மக்களை பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட செய்தார். மேலும் தொழிலாளர்கள் 60 லட்சம் பேருக்கு ரூ. 2000 வழங்க உத்தரவிட்டுள்ளார். இதில் மேலும் பல தொழிலாளர்கள் விடுபட்டுள்ளதால் அவர்களையும் கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கும் 2000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக அம்மாவின் அரசு செயல்படுகிறது.

இவ்வாறு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ பேசினார்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் வி.ஏழுமலை, முன்னாள் மாவட்ட செயலாளர் தெள்ளார் சி.சீனுவாசன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் டி.கே.பி.மணி, வந்தவாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.கே.எ.லோகேஷ்வரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணன், திருப்பனங்காடு கூட்டுறவு சங்க தலைவர் துரை பல்லவன், கல்வி நிர்வாகி பா.போஸ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் டி.சந்திராதங்கராஜ், கிளை கழக அம்மா பேரவை செயலாளர் சி.செல்லக்குட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.