இந்தியா மற்றவை

அயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் : உச்ச நீதிமன்றம் சம்மதம்…

புதுடெல்லி:-
அயோத்தி வழக்கை நேரலை செய்யக்கோரி ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான கே.என். கோவிந்தாச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் மாற்றியது. இந்த நிலையில்,  மேற்கூறிய மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சம்மதம் தெரிவித்தார்.  மேலும், அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு எந்த அளவிற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை  ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உச்சநீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.