தற்போதைய செய்திகள்

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் புதிய கட்டடங்கள் – அமைச்சர் பா.பென்ஜமின், கோ.அரி எம்.பி. திறந்து வைத்தனர்…

திருவள்ளூர்:-

திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய கட்டடங்களை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.அரி ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் திருவாலங்காடு என்கண்டிகை ஊராட்சியில் ரூபாய் 7. 41 லட்சம் லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டடங்களையும், திருத்தணி நகராட்சி 6-வது வார்டு பகுதியில் ரூபாய் 8.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டடங்களையும், திருத்தணி நகராட்சி ம.பொ.சி. சாலையில் ரூபாய் 7.41 லட்சம் மதிப்பீட்டில் பன்முனை பயன்பாட்டு கட்டடம் அமைத்தல் பணி, கூட்டுறவு மருந்தகம் மற்றும் நியாய விலை கடை ஆகியவற்றையும் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கலம்பகம் ஊராட்சி வெங்கடாபுரம் கிராமத்தில் ரூபாய் 8.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடைகளையும் திருத்தணி நகராட்சி செங்குந்தர் நகர் பேருந்து நிறுத்தம் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் விநாயகபுரம் இருளர் காலனியில் பேருந்து நிறுத்தம் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் கட்டடங்களை ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி ஆகியோர் திறந்து வைத்தனர்.

அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் திருத்தணி அரசு மருத்துவமனை சுகாதார திருவிழா மற்றும் வளைகாப்பு செய்யும் நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு மலர் தூவி வாழ்த்தி சீர்களை வழங்கி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமினை ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.அரி ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் பான்டராவேடு ஊராட்சியில் பாரத பிரதமரின் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் பாண்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களிடம் இருந்து 300க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய தீர்வுகளை வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை குமார், துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்