அரியலூர்

அரியலூரில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் சார்பில் மனிதசங்கிலி…

அரியலூர்:-

அரியலூரில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் சார்பில் மனிதசங்கிலி பேரணி நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத்துறை, மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்திய, குழந்தை தொழிலாளர் முறைமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றல் மற்றும் மனித சங்கிலி பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள், அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்யநாராயணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் து.வசந்தகுமார் வரவேற்று பேசினார்.

விழாவுக்கு தலைமை வகித்த அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்யநாராயணன், குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கான உறுதிமொழியை வாசித்து, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மனித சங்கிலி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராசன், நன்நடத்தை அலுவலர் ஜோதி, மாவட்ட பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் பழனிசாமி, குழந்தைகள் பாதுகாப்புத்துறை அலுவலர் செல்வராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா, அரியலூர் டாக்டர் ஆனந்த், சுகாதார ஆய்வாளர்கள் வகீல், ஜெகதீஷ்குமார், சமூக ஆர்வலர் ரவிச்சந்திரபோஸ் மற்றும் பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

முடிவில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் குருநாதன் நன்றி கூறினார்.