சிறப்பு செய்திகள்

அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு காலி – முதலமைச்சர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்…

சென்னை:-

அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு காலியானது. அ.ம.மு.க., காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியை, அவரது இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் கே.பாலச்சந்தர், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில துணைச் செயலாளர் டி.கவுரிசங்கர், புதுச்சேரி மாநிலத் தலைவர் கே.புண்ணியமூர்த்தி, செயலாளர் டி.தினேஷ்குமார் ஆகியோரும்,

தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாவட்டச் செயலாளர்களான, வட சென்னை ஆர். தமிழரசன், தென் சென்னை எஸ். மணிகண்டன், காஞ்சிபுரம் வடக்கு காட்டாங்கொளத்தூர் சி.மதன், காஞ்சிபுரம் மத்தியம் அருண், திருவள்ளூர் கிழக்கு மாதவரம் எம்.சங்கர், திருச்சி மாநகர் பொன்மலை எச்.ஜாபர், திருநெல்வேலி வடக்கு ஆர்.சிவா அருண்குமார், திருநெல்வேலி புறநகர் சாந்தசீலன் ஆகியோரும்,

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஆர்.பாலசேகர், மாதவரம் வடக்கு பகுதி 17 வது வட்டச் செயலாளர் சி. குமரன், மாதவரம் தெற்கு பகுதி துணைச் செயலாளர் வி.விமல்குமார் ஆகியோரும்,காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வி.ரமேஷ், அண்ணா திராவிட கழகத்தின் திருவொற்றியூர் பகுதிச் செயலாளர் வி.கே. பாபா ஜெயபால் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், துணைச் செயலாளர் டி.பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.