இந்தியா மற்றவை

ஆதார் – பான் இணைப்புக்கான கால அவகாசத்தை நீடித்தது மத்திய அரசு…

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக காலக்கெடு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 ஆம் தேதியுடன் இணைப்புக்கான காலக்கெடு முடிவடைவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு ஆதார் இணைக்கப்படாத பான் எண் செல்லாததாகி விடும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் பான் – ஆதார் எண் இணைப்பதற்க காலக்கெடு வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறப்பு காரணங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை தவிர்த்து, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது, ஆதார் – பான் எண்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.