தற்போதைய செய்திகள்

ஆரணியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி பகுதியில் நகர்புற வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு, கால்வாய் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்காக அடிக்கல் நாட்டுவிழா ஆரணி கே.சி.கே,நகர் பகுதியில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தலைமை தாங்கினார், செய்யாறு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். ஆரணி கோட்டாட்சியர் மைதிலி, வேலூர் பால் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பாரி பி.பாபு, அரசு வழக்கறிஞர் க.சங்கர், நகர, ஒன்றிய செயலாளர்கள் எ.அசோக்குமார், பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் அ.கோவிந்தராசன், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், வட்டாட்சியர் தமிழ்மணி, கூட்டுறவாளர் கலைவாணி, முன்னாள் கவுன்சிலர் எ.கே.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

திட்டப்பணிகள் விவரம் வருமாறு;-

ஆரணி நகராட்சி 1-வது வார்டில் ரூ. 2 கோடியே 47 லட்சம் மதிப்பில் புதுகாமூர் சாலை, ஜெயம் நகர், கே.கே.நகர் பகுதிகளில் சிறுபாலத்துடன் கூடிய தார்சாலை அமைத்தல், அன்னை சத்யா நகர், பழைய ஆர்க்காடு சாலை பகுதிகளில் சாலை பணி, 7-வது வார்டில் ரூ. 2 கோடியே 41 லட்சம் மதிப்பில் தணிகாசலம் தெரு முதல் சத்தியமூர்த்தி ரோடு வரை, 8-வது வார்டில் பரசுராமன் தெரு, 10-வது வார்டில் நாராயணன் தெரு, 13-வது வார்டில் அருணகிரிசத்திரம் முதல் தச்சூர் சாலை வரை, 14-வது வார்டு வெங்கடேஷ்வரா நகர், மில்லர்ஸ் சாலை மற்றும் சபாஷ்கான் தெரு முதல் வெங்கடேஷ் நகர் பின்புறம் வரை, 16-வது வார்டு பழனி ஆண்டவர் கோயில் தெரு, 22-வது வார்டு சாமித்தெரு ஆகிய பகுதிகளில் தார்சாலை பணி,

23-வது வார்டு ரூ. 1 கோடியே 81 லட்சம் மதிப்பில் இளங்கோ தெரு, 24-வது வார்டு வி.எல்.டி நகர், 25-வது வார்டு சோலை நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலத்துடன் கூடிய தார்சாலை அமைத்தல், 20-வது வார்டு சூரியகுளம் தெற்கு மற்றும் மேற்குதெரு, 23-வது வார்டு தச்சூர் சாலை முதல் நகராட்சி நீர்த்தேக்கத்தொட்டிக்கான அணுகுசாலை, 24-வது வார்டு பாரதியார் தெரு, 25-வது வார்டு நாயக்கன்பாளையம், மலையாம்பட்டு ரோடு பகுதிகளில் தார்சாலை பணி.

30-வது வார்டில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் ஜெயலட்சுமி நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலத்துடன் கூடிய தார்சாலை அமைத்தல், முள்ளிப்பட்டு ரோடி, எம்.ஜி.ஆர் நகர், நீதிபதி விஜயரங்கன்தெரு, பிச்சாண்டி நகர், அன்புநகர் பின்புறம், வி.ஏ.கே.நகர், ரகுநாதபுரம் கூட்ரோடு பகுதிகளில் சாலை பணி, ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் 27-வது வார்டில் மின்வாரிய அலுவலகம் பின்புறம் காமராஜர் நகர், அண்ணாநகர், வார்டு எண் 28ல் பள்ளிக்கூடத்தெரு விரிவு பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலத்துடன் கூடிய சிமெண்ட் சாலை அமைத்தல், 9-வது வார்டு இந்திராநகர், 26-வது வார்டு நாடகசாலைபேட்டை தெரு பின்புறம், 32-வது வார்டில் கோட்டை வடக்கு தெருவில் சிமெண்ட் சாலைப்பணி, 3-வது வார்டில் கோட்டை மைதானத்தை சுற்றி உள்ள சாலையில் இருந்து பழைய பஸ்நிலையம் வரை இருபுறங்களில் மழைநீர் வடிகாலுடன் கூடிய பேவர் பிளாக் தளம் அமைத்தல், சாலைப் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.