சிறப்பு செய்திகள்

ஆரணி தொகுதி கழக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மார்ச் 28 – ம்தேதி பிரச்சாரம்

திருவண்ணாமலை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நாளை ஆரணி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  வியாழக்கிழமை (மார்ச் 28) ஆரணி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார். ஆரணி நாடாளு மன்ற தொகுதியில் உள்ள வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளுர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார்.

முதலமைச்சர் பிரச்சாரம் செய்யவரும் நிலையில் முதல்வரை வரவேற்க திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாரும் செய்யாறு எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள செஞ்சி, மைலம் சட்டமன்ற தொகுதிகளில் மார்ச் 29-ம்தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் அப்பகுதியில் பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்து வருகிறார்.