தற்போதைய செய்திகள்

ஆரணி நகராட்சி பகுதியில் ரூ.5 கோடியில் புதிய சாலைகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பணியை துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சிப் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகள் நடைபெறுவதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் உள்ள 33-வார்டுகளிலும் தார்சாலை அமைத்தல், சிமென்ட்சாலை அமைத்தல், பேவர்பிளாக் சாலை அமைத்தல், பக்ககால்வாய் கட்டும்பணிகள் செய்வதற்காக ஆரணி மகாலட்சுமி நகர் பகுதியில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் விழாவில் கோட்டாட்சியர் மைதிலி, முன்னாள் எம்எல்ஏ ஜெமினி கே.இராமச்சந்திரன், அரசு வழக்கறிஞர் க.சங்கர், மாவட்ட பால் கூட்டுறவு சங்கதுணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர செயலாளர் எ.அசோக்குமார், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் அ.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, மாவட்ட பாசறை செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் டி.கருணாகரன், அறங்காவலர் குழுத்தவைர் எஸ்.ஜோதிலிங்கம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ப.திருமால், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் தேவசேனாஆனந்த், ஒப்பந்ததாரர்கள் தர்மதுரை, மினர்வா அண்ணாதுரை, ஏ.ஜி.ஆர்.மோகன், வட்டாட்சியர் தியாகராஜன், நகராட்சி ஆணையர் அசோக்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஆரணி காந்திரோடு பஜாரில் உள்ள சென்டர் மீடியனில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.நவநீதம்கிருஷ்ணன் உள்ளுர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கோபுரவிளக்குகள் அமைத்தல் பணியினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.