திருவண்ணாமலை

ஆரணி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெற்றி உறுதி – தூசி கே.மோகன் எம்.எல்.ஏ பேச்சு…

திருவண்ணாமலை:-

ஆரணி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலை வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஆரணி தொகுதி கழக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை ஆதரித்து கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இது இயற்கையான கூட்டணி. வெற்றி கூட்டணி. கழக வேட்பாளர் ஏழுமலை வெற்றிபெறுவது உறுதி. ஆரணி தொகுதியில் கூட்டணி கட்சியினர் கவனத்துடன் செயல்பட்டு கழக வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். தனக்கு பின்னாலும் கழகம் நூறு ஆண்டுகள் ஆட்சி செய்யும் மக்கள் பணியாற்றும் என புரட்சித்தலைவி அம்மா கூறினார். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய கழக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். பொங்கல் திருநாள் கொண்டாட இரண்டு கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 வழங்கிய அரசு. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இதில் விடுபட்டவர்களிடமும் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களுக்கும் தேர்தல் முடிந்ததும் பணம் வழங்கப்படவுள்ளது.

பிரதமர் மோடி இரும்பு மனிதர். அவர் விவசாயிகளுக்காக வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அதன் முதற்கட்டமாக 2000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. மோடி மீண்டும் பிரதமராக 40 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெற வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலில் பா.ம.க கணிசமான வாக்குகளை பெற்ற தொகுதி. இக்கூட்டணி தொடரும். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும். அப்போது உழைக்கும் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆகையால் கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்பட்டு கழக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வோம்.

இவ்வாறு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ பேசினார்.

இக்கூட்டத்தில் வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை பேசுகையில், நான் ஆரணி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். எனக்கு அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். அம்மா அரசின் அனைத்து திட்டப்பணிகளும் மக்களை சென்றடையும் வகையில் செயல்படும் அரசாக உள்ளது. விவசாயிகளின் அரசாக மத்திய மாநில அரசுகள் செயல்படும். எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து பல்வேறு திட்டப்பணிகளை செய்யாறுக்கு செய்துள்ளேன். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய கழக வேட்பாளரான என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள் என்றார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் எம்.மகேந்திரன், மாவட்ட கழக இணைச் செயலாளர் எம்.விமலா மகேந்திரன், நகர கழக செயலாளர் ஏ.ஜனார்த்தனம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ.அருணகிரி, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ரவிச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் இ.வெங்கடேசன், நகர அம்மா பேரவை செயலாளர் கே.வெங்கடேசன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் தூசி கே.குமரேசன், முன்னாள் நகர செயலாளர் பூக்கடை கோபால், டி.பி.துரை, கார்த்திகேயன், பா.ம.க நிர்வாகிகள் முன்னாள் எம்பி மு.துரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.எதிரொலி மணியன், மாநில துணை பொதுச் செயலாளர் ஆ.வேலாயுதம், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் கோபிநாத், பா.ஜ.க மாவட்டத் தலைவர் பாஸ்கர், புதிய நீதிக்கட்சி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், த.மா.கா மாவட்ட தலைவர் தாமோதரன் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.