விளையாட்டு

ஆஸ்திரேலிய பேட் தயாரிப்பு நிறுவனத்தின் மீது டெண்டுல்கர் வழக்கு…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் பேட் தயாரிப்பு நிறுவனத்திடம் 20 லட்சம் டாலர் ராயல்டி தொகை கோரி சச்சின் டெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிட்னியைச் சேர்ந்த ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தனது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் தர கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தமிட்டதாக சச்சின் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அந்த நிறுவனம் ஒப்பந்தப்படி தொகையை தரமறுத்துவருவதாக சச்சின் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டதாகவும் அதற்கு பதிலளிக்க மறுத்த ஸ்பர்டான் நிறுவனம் தனது பெயர் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்டு பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்தே அந்த நிறுவனத்திற்கு எதிராக தான் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.