விளையாட்டு

இந்தியன் சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் நுழைந்தது கோவா…

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாட கோவா அணி தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதி ஆட்டத்தில் கோவா மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இருப்பினும் அரையிறுதியின் முதல் சுற்றில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியிருந்தது.

இரண்டு சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் 5-2 என்ற கோல் கணக்கில் கோவா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்களூர் மற்றும் கோவா அணிகள் மோதுகின்றன.