தற்போதைய செய்திகள்

இந்தியாவே வியக்கும் அளவுக்கு தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதம்…

தூத்துக்குடி:-

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் சின்னப்பனுக்கு ஆதரவாக இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குசேகரித்து வரும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ புதூர். மதுரை ரோட்டில் புதூர் ஒன்றிய தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாளர் ஞானகுருசாமி தலைமை தாங்கினார். புதூர் யூனியன் முன்னாள் பெருந்தலைவர் தனஞ்செயன். நகர செயலாளர் ஆண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் இரும்பு கோட்டையாக திகழ்ந்து வரும் விளாத்திக்குளம் தொகுதியில் கழக வேட்பாளர் சின்னப்பன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். புரட்சித்தலைவி அம்மா இந்தியாவே வியக்கும் வகையில் தமிழகத்தை எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைய செய்து நல்லாட்சி நடத்தினார்.

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தற்போது நடைபெறும் அம்மாவின் நல்லாட்சியின் சாதனைகளை ஒவ்வொரு வீடுவீடாக சென்று மக்களிடம் கழகத்தினர் எடுத்து கூறி இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாலே போதும் இந்த விளாத்திக்குளம் தொகுதியில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர் சின்னப்பன் வெற்றிபெறுவார். அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களை தொகுதி மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். கழக வேட்பாளரை மக்கள் அமோகமாக வெற்றிபெற வைப்பார்கள் என்பது உறுதி.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் புதூர் ஒன்றிய கழக செயலாளர் ஞானகுருசாமி. முன்னாள் புதூர் பூனியன் பெருந்தலைவர் தனஞ்செயன், துணைத்தலைவர் வெம்பூரார், முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் பெரியபூசு, புதூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயவேல், கிளை செயலாளர்கள் செண்பகராமன், பேப்பர் பாண்டி. கூட்டணி கட்சிகளை சேர்ந்த அழகர்சாமி, சேதுராமபாண்டியன், சோலையப்பன், சரவணன், பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.