விளையாட்டு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி போர் போன்றது – ஷேவாக்…

கோவாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் அளித்த ஒரு பேட்டியில், ‘பாகிஸ்தானுடன் நாம் போர் புரிய வேண்டுமா? அல்லது வேண்டாமா?. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் நாம் மோத வேண்டுமா?, இல்லையா? என்பது குறித்து அதிகம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

தேசநலனுக்கு எது நல்லதோ? அதனை தான் நாம் செய்ய வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுவது என்பது அதுவே கிட்டத்தட்ட ஒரு போர் போன்றது தான். அதில் நாம் வெற்றி பெற வேண்டும். தோற்கக்கூடாது’ என்று தெரிவித்தார்.