இந்தியா மற்றவை

இயல்புநிலை திரும்பியதும் மீண்டும் மாநில அந்தஸ்து – மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு…

புதுடெல்லி:-

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

மத்திய உள்துறை அமித் ஷா காலை மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்தஸ்து ரத்துடன் ஜம்மு- காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமித் ஷா ‘‘காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். யூனியன் பிரதேசம் என்பது தற்காலிகமானதே’’ என்றார்.