திருவண்ணாமலை

இரட்டைஇலைக்கு தான் எங்கள் ஓட்டு – ஆரணி கழக வேட்பாளரிடம் வாக்காளர்கள் உறுதி…

திருவண்ணாமலை:-

எங்கள் வாக்குகள் இரட்ைட இலை சின்னத்துக்கு தான் என்று ஆரணி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளரிடம் வாக்களர்களிடம் உறுதி அளித்தனர்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை ஆதரித்து செய்யாறு நகரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமசந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ ஆகியோர் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தனர். செய்யாறில் 24, 25, 26, 27, ஆகிய வார்டுகளில் பிரச்சாரம் செய்த அவர்கள் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றதோடு அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

பிரச்சாரத்தின் போது வார்டுகளில் கூடியிருந்த ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் வழியெங்கும் இரட்டைவிரலை காட்டி வாக்களிப்பதாக ஆரவாரம் செய்தனர். இப்பிரச்சாரத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வே.குணசீலன், சுகர் மில் தலைவர் தூசி கே.குமரேசன், ஒன்றிய மாணவரணி செயலாளர் மகேந்திரன், மாவட்ட கழக இணைச்செயலாளர் டி.கருணாகரன், நகர செயலாளர் ஜனார்த்தனம், பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், அம்மா பேரவை வெங்கடேசன், டி.பி.துரை, வெம்பாக்கம் கார்த்திகேயன், சி.துரை மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கழக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை ஆரணியில் உள்ள சவுராஷ்டிரா மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது சவுராஷ்டிரா இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோதண்டராமர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் சவுராஷ்டிரா சங்க நிர்வாகி செல்வராஜ் வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலைக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக் கூறினார்.

இந்த பிரச்சாரத்தின் போது அரசு வழக்கறிஞர் க.சங்கர், நகர செயலாளர் எ.அசோக்குமார், ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், அவைத்தலைவர் ஜோதிலிங்கம், மாணவரணி குமரன், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி, புதியநீதிக்கட்சி மாவட்ட செயலளர் ஜெயக்குமார், இளைஞரணி தினேஷ், மற்றும் சவுராஷ்டிரா சங்கத்தினர் உடனிருந்தனர்.