தற்போதைய செய்திகள்

இரட்டைஇலை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி போட்டி – ஏ.சி.சண்முகம் அறிவிப்பு…

சென்னை:-

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியை பெறுவோம் என்று புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.அ.இ.அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் தலைமை கழகத்தில்  நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்திருக்கிறார்கள். கழக கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிபெறும். கழக கூட்டணியில் நாங்கள் கேட்ட தொகுதி கிடைத்து விட்டது. தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை.

எங்களுடைய தொகுதி எது என்பது குறித்து கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அறிவிப்பார்கள். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு ஏ.சி.சண்முகம் கூறினார்.