இந்தியா மற்றவை

இரண்டு நாள் பயணமாக பூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி…

புதுடெல்லி:-

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பூடான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர், நண்பகல் பூடான் சென்றடைந்தார்.

பாரோ சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவரை பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். ஒரு குழந்தை பூச்செண்டு கொடுத்து மோடியை வரவேற்றது. பின்னர் ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சுற்றுப்பயணத்தின்போது மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பூடான் நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங், பூடான் நாட்டின் 4 வது மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சக் ஆகியோரை மோடி சந்தித்து பேச உள்ளார்.

மேலும் இந்தியா-பூடான் இடையே கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன. நீர்மின் நிலையம் மற்றும் இஸ்ரோ சார்பில் கட்டப்பட்டுள்ள தரை கட்டுப்பாட்டு நிலையம் உள்ளிட்ட 5 திட்டங்களின் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.