திருநெல்வேலி

இஸ்லாமியர்களின் பாதுகாப்பு அரணாக திகழ்கிறது கழக அரசு – தமிழ்மகன்உசேன் பெருமிதம்…

திருநெல்வேலி:-

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன்உசேன் பொட்டல்புதூரில் பிரச்சாரம் செய்து இரட்டை இலைக்கு வாக்குசேகரித்தார். அவர் பொட்டல் புதூர் பஜார் திடல், ரவணசமுத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், பத்தமடை, சேரன்மகாதேவி, களக்காடு பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து இரட்டைஇலைக்கு வாக்குசேகரித்து பேசினார்.

அப்போது அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன்உசேன் பேசியதாவது:-

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ மற்றும் எம்.பியாக இருந்த போதும் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை செய்துள்ளார். கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீர் சமுதாய கூடங்கள், கல்வி கட்டடங்கள், மருத்துவமனைகள், போக்குவரத்து வசதிகள், என இந்த பகுதி மக்களுக்கு பல நன்மைகள் செய்துள்ளனர். கழக வேட்பாளர் பி.எச்.மனோஜ்பாண்டியனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இஸ்லாமியரின் பாதுகாப்பு நலனில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு அதிக அக்கறையுடன் இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். தமிழக மக்களின் உரிமைக்காகவும் திட்டங்களை பெறுவதற்காகவும், யார் தமிழக மக்களுக்கு நன்மை செய்கின்றார்களோ அவருடன் தான் கூட்டு என்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டணிக்கு செயல் வடிவம் கொடுத்தனர்.

இஸ்லாமிய மக்கள் ரமலான் நோன்பு திறக்கின்ற காலங்களில் 30 நாட்களிலும் நோன்பு திறப்பதற்கு கஞ்சி குடிப்பார்கள். அந்த கஞ்சிக்கு புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் 3000 மெட்ரிக் டன் அரிசியை வழங்கியது. தற்போது அம்மா அரசில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 4800 மெட்ரிக் டன் அரிசியை வழங்கி இருக்கிறார். சிந்தித்து பார்க்க வேண்டும். இஸ்லாமிய மக்களே. இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத வகையில் உலாமக்களுக்கு ஓய்வு ஊதியம் புரட்சித்தலைவர் ஆட்சியில் 615 நபர்களுக்கு மாதம் 250 வீதம் புரட்சித்தலைவர் தந்தார்.

1991-ல் இந்த உதவி தொகையை அதிகப்படுத்த வேண்டும் இன்னும் சில பேருக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் இஸ்லாமிய மக்கள் கொடுத்தனர். அம்மா பணிவோடு அந்த கோரிக்கையை ஏற்று 1200 நபர்களுக்கு தலா ரூ. 1500 வீதம் வழங்க ஆணையிட்டு வழங்கினார். இஸ்லாமிய மக்களே நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அதிக நன்மை உங்களுக்கு செய்யக்கூடிய பி.எச்.மனோஜ்பாண்டியனுக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன்உசேன் பேசினார்.

இந்த பிச்சாரத்தில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பெரியபெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மகப்பூப்ஜான், மாவட்ட மன்ற துணைத்தலைவர் பழனியப்பன், மாவட்ட மன்ற இணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன், பாளை மஸ்தான், நெல்லை மானா, மாவட்ட மாணவரணி செயலாளர் முருகேசன், வீரவநல்லூர் நகரச் செயலாளர் சுப்பிரமணியன், சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் கருத்தப்பாண்டி, பத்தமடை நகர செயலாளர் சங்கரலிங்கம், பொருளாளர் மாயகிருஷ்ணன், அசன், அல்லாபிச்சை, காதர், தலைமைக் கழக பேச்சாளர் அணுகுண்டு பீர்முகம்மது, விழுப்புரம் முகம்மது சேட், திருவல்லிக்கேணி வரதராஜன், கண்ணன், மாரியப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.