தற்போதைய செய்திகள்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கொடி காத்த குமரன் 115-வது பிறந்தநாள் விழா – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு…

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்ற கொடிக்காத்த குமரன் 115-வது பிறந்தநாள் விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் கொடிகாத்த குமரனின் 115-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் சார்பில் கொடிகாத்த குமரன் பிறந்த இடமான சென்னிமலை பேரூராட்சியில் ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான அக்டோபர் மாதம் 4-ம்தேதி அரசு விழாவாக கொண்டாட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணையிட்டதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர். சி.கதிரவன் தலைமையில் ஈரோடு மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ, சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்தியபாமா, சட்டமன்ற அவைக் குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணி, காங்கேயம் எம்.எல்.ஏ. உ.தனியரசு ஆகியோர் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர். உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடிகாத்த குமரன் பிறந்த இடத்தில் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்.உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் கொடிகாத்த குமரன் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு புகைப்படக்கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இவ்விழாவில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், சென்னிமலை ஒன்றியக் கழக செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக இணைச்செயலாளர் கே.வி.மணிமேகலை, ஒன்றிய செயலாளர்கள் விஜயன் (எ) ராமசாமி, ஆர்.பி.கதிர்வேல், பூவேந்திரகுமார், சி.டி.ரவிச்சந்திரன், பேரவை செயலாளர் மணி (எ) சின்னசாமி,

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் எஸ்.எஸ்.ஜெயபாலாஜி, ஜீவா ராமசாமி, பகுதி கழக செயலாளர்கள் ஏ.ஆர்.ஜெகதீசன், பி கேசவமூர்த்தி, முருகுசேகர், கோவிந்தராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஈரோடு குணசேகரன், ரமேஷ், காயத்ரி மணி (எ) அருணாச்சலம், கே.ஏ.கருப்புசாமி, சோழாலோகநாதன், பாவை அருணாசலம், ஜீவா ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜம்பு (எ) சண்முகசுந்தரம், கே.ஆர்.துரைசாமி, கணபதி, பெருந்துறை சங்கர், வரப்பாளையம் பெரியசாமி, பெத்தாம் பாளையம் சண்முகம், நல்லசிவம், நந்தகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.ச.விக்னேஷ், சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.கிருஷ்ணன் உட்பட வாரிசுதாரர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.