தமிழகம்

உடல் நலக்குறைவால் மரணமடைந்த 15 காவலர் குடும்பங்களுக்கு இரங்கல் – தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு…

சென்னை

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் அறிக்கை வருமாறு:-

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ச.சுரேஷ்குமார்;
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வின்சென்ட்;சென்னை பெருநகரக் காவல், நுண்ணறிவுப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கே.பி.ஆஷா தேவி கண்ணா;கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சி.வில்லியம்ஸ்;

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த க.குமார்;கோயம்புத்தூர் மாநகரம், இராமநாதபுரம் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சி.விஜயராகவன்;சென்னை பெருநகரக் காவல், ஜெ.ஜெ. நகர் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வி்.கோதண்டபாணி;விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ர.ராஜசேகர்;திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ம.சிவபாதகசேகர்;திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கோ.காமராஜ் ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியையும்;

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பி.முருகன்;
சென்னை பெருநகரக் காவல், மணலி காவல் நிலைய போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஏ.ஆறுமுகம்;திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த க.விவேகானந்தன்;கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சு.பாக்கியம்;திண்டுக்கல் மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த என்.கண்ணன்;ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துக்களில் உயிரிழந்த 15 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 15 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.