தற்போதைய செய்திகள்

உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் 264 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் சி.வி.சண்முகம் பணியை துவக்கி வைத்தார்

விழுப்புரம்:-

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பாக, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 264 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.இல.சுப்பிரமணியன் தலைமையில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்.

பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் மத்திய, மாநில நிதி மற்றும் பயனாளிகளின் பங்குத்தொகையுடன் கூடிய 400 ச.அடிகள் அளவுகள் கொண்டு 264 அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் ரூ.2466 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கட்டுவதற்கு, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

மேற்படி திட்டத்தில் பயனடையும் தகுதியான பயனாளிகளை உளுந்தூர்பேட்டை பேரூராட்சி மூலம் தேர்வு செய்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகள் கட்டுவதற்காக மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு, குடியிருப்பு கட்டுமானப் பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான இரா.குமரகுரு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் எட்வின்சாம், உதவி செயற்பொறியாளர் தவமணி, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் இளங்கோவன் உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர் மணிராஜ், முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் சாய்ராம், ஒன்றிய செயலாளர்களான ராஜசேகர், செண்பகவேல், ராஜேந்திரன், அருணகிரி, அரசு, பழனிசாமி, நகர செயலாளர் சியாம்சுந்தர், முன்னாள் சேர்மன் சன்னியாசி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கதிர்.தண்டபாணி, மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் டாக்டர்.குமரேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் வெற்றிவேல், மாவட்ட பாசறை செயலாளர் சந்தோஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமலிங்கம், சர்க்கரை ஆலை தலைவர் ராமலிங்கம் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.