இந்தியா மற்றவை

ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் அனைவரும் காவலாளி தான் : பிரதமர் மோடி…

புதுடெல்லி:-
ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் அனைவரும் காவலாளி தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்   வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:- 
உங்களின் காவலாளி தீர்க்கமாக நின்று நாட்டுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்.ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் அனைவரும் காவலாளி தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளி தான். இன்று ஒவ்வொரு இந்தியனும் சொல்கிறார்,  நானும் காவலாளி தான் என்று” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.