தற்போதைய செய்திகள்

எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரம் இனியும் மக்களிடம் எடுபடாது – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…

திருப்பூர்

எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் என்றுமே மக்களிடம் எடுபடாது பொள்ளாச்சியில் கழகத்தின் வெற்றி உறுதி என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து கழக அமைப்பு செயலாளரும், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன், உடுமலை தொகுதி குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட புக்குளம் பொன்னேரி கோட்டாமங்கலம் வரதராஜபுரம் குடிமங்கலம் பூளவாடி பெரியபட்டி அம்மாபட்டி பெதப்பம்பட்டி நால்ரோடு ஆகிய பகுதிகளில் வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழக அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கிய கழக அரசு, தேர்தல் அறிக்கையின்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கிடுவோம். 17 ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி நடத்திய காங்கிரஸ், தி.மு.க.வினர் தமிழகத்திற்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்தனர். பதவிகளை அனுபவித்து விட்டு தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் துரோகம் மட்டுமே செய்தவர்கள் தான் இவர்கள். கழக வேட்பாளர் சி.மகேந்திரன் 2014-ம் ஆண்டு தேர்தலில் தந்த வாக்குறுதிகளை முழுவதும் நிறைவேற்றியவர்.

பொள்ளாச்சி திண்டுக்கல் சாலை உடுமலைப்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புறவழிச்சாலை, சாலைகளை அகலப்படுத்துதல், மையத் தடுப்பான். பாலங்கள் விரிவாக்கம், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், நடைபாதை ரவுண்டானா, உயர்மட்ட பாலம் என எண்ணற்ற பணிகளை செயல்படுத்தியுள்ளார்.

கொப்பரை தேங்காய்க்கு விலைஉயர்வு, கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம் என எண்ணற்ற சாதனைகளை செய்து வருகிறார். இத்தொகுதியில் நமது வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் என்றுமே எடுபடாது. பொள்ளாச்சி தொகுதி கழகத்தின் கோட்டை. இத்தொகுதியின் கழக பேச்சாளர் சி.மகேந்திரன் பல லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெறுவார்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இந்த பிரச்சாரத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.பாண்டியன், சி.அன்பர் ராஜன், ராமநாதன், நாகராஜன், மாசிலாமணி, முத்துகுமார சாமி, மயில்சாமி, ராம்பிரகாஷ், தேவகி, அறிவழகன், வழக்கறிஞர் விமலா, செளந்தர்ராஜ், மஹாராஜா, மதி, வி.பி.சிவா, பா.ஜ.க. மாவட்ட செயலாளர் மவுனகுருசாமி, மாவட்ட மகளிர் அணி தலைவர் கலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.