திருநெல்வேலி

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து கழக வேட்பாளரை வெற்றிபெற செய்வோம் – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. சபதம்

திருநெல்வேலி

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து கழக வேட்பாளரை வெற்றி பெற செய்வோம் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

நாங்குநேரி தொகுதி சீவலப்பேரி பகுதியில் கழக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் கழகம் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும். நமது வெற்றியை தடுக்க எதிர்க்கட்சியினர் வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்வார்கள். அதை நாம் விழிப்புடன் இருந்து தடுக்க வேண்டும். எனவே கழக வேட்பாளரின் வெற்றிக்கு ஒவ்வொருவரும் காலையிலும் மாலையிலும் வீடு வீடாக கழக அரசின் சாதனைகளை எடுத்து கூற வேண்டும். எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து கழக வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்வோம்.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட கழக நிர்வாகிகள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், அம்பலம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மேலும் நகர செயலாளர் பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.