மதுரை

ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயர இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் வேண்டுகோள்…

மதுரை

ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிப்பீர் என்று காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து ஹார்விபட்டியில் உள்ள அனைத்து வீடுகளிலும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். உடன் ஹார்விபட்டி முன்னாள் கவுன்சிலர் பாண்டுரங்கன், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட , வட்டக் கழக நிர்வாகிகள் அம்மன் பி வைரமுத்து, வி. பரணிபிரசாத், எஸ். வரதராஜன், கோவிந்தராஜ், பெரிய நாயகம், மதனந்தபுரம் ராஜி, அமராவதி அம்மாள், ஆஷா பாஸ்கர், ஆலந்தூர் பாலாஜி, பாலவாக்கம் சத்யராஜ், ஆலந்தூர் அசார் மேடவாக்கம் சத்யராஜ் மற்றும் பலர் சென்றனர்.

பிரச்சாரத்தின்போது சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசியதாவது:-

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு இருந்தது. இதனால் மக்களாகிய நீங்கள் மிகவும் அவதிப்பட்டீர்கள், 2011ல் அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் தமிழகத்தின் மின்தட்டுப்பாட்டை போக்கி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்கினார். அதனை தொடர்ந்து இன்றைக்கு ஒரு சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், தொடர்ந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து நமக்கு போக மீதியை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் தான் உணவு பாதுகாப்பு உள்ளது. இங்கு தான் மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. அரிசி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலமான கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், ஆகிய மாநிலங்களில் கூட இத்திட்டம் கிடையாது. அதே போல் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கமும், திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது. தங்கத்தை வெட்டி எடுக்கும் நாடுகளில் கூட இத்திட்டம் கிடையாது.

இந்தியாவில் 29 மாநிலங்கள் இருந்தாலும் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரண்டு சக்கர வாகன திட்டம் தமிழகத்தில் தான் வழங்கப்படுகிறது. ஆகவே தொடர்ந்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நல் ஆட்சியை வழங்கி வரும் அம்மா அரசிற்கு உங்களின் ஆதரவை தந்திடும் வண்ணம் நடைபெறும் இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.