திருவள்ளூர்

ஏழை பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர் அம்மா – முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி பேச்சு…

திருவள்ளூர்

புரட்சித்தலைவி அம்மாவின் 71-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாதவரம் பகுதி 19-வது வட்ட கழகம் சார்பில் வட்ட செயலாளர் கே.பிரதாபன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிககு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாதவரம் பகுதி செயலாளர் டி.வேலாயுதம், அம்மா பேரவை முன்னாள் செயலாளர் கே.துரைராஜ், சீனிவாசன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். இக்கூட்டத்தில் டாக்டர்.வேணுகோபால் எம்.பி., முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, எம்.ஜி.ஆர். இளைஞரனி செயலாளர் புழல் ஜி.கே.இன்பராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி பேசியதாவது: –

இந்திய திருநாட்டில் இன்று மக்களை நேசிக்கும் ஒரேஇயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே. அதனால் அம்மா அவர்கள் யோசித்து யோசித்து திட்டங்களை தந்தார். புரட்சித்தலைவி அம்மா வழங்கிய திட்டத்தில் மிக உன்னதமான திட்டம் தாலிக்கு தங்கம். இந்திய திருநாட்டிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கி இன்று எத்தனையோ தாய்மார்களின் இல்லங்களில் தீபஒளியேற்றி வைத்தவர் அம்மா.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது கூட அம்மா அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 4 கிராம் தங்கத்தை 8 கிராம் தங்கமாக தருவோம் என்று கூறினார் அம்மா. ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் உடனடியாக 10-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் சீதனமாக ரொக்கபணம் 25 ஆயிரம், பட்டதாரிகளுக்கு 8 கிராம் தங்கம் 50 ஆயிரம் பணம் என்று வழங்கினர். இந்த திட்டத்தின் மூலம் எப்படியாவது 10 ம் வகுப்பு வரையாவது நாம் படிக்க வேண்டும் என்று பெண் குழந்தைகளுக்கு ஒரு உந்துதல் ஏற்பட்டு படிப்பார்கள். அம்மா ஆழ்ந்து சிந்தித்து இப்படி ஒரு திட்டத்தை அறிவித்து அதனை செயல்படுத்தினார்.

இன்று அம்மா அவர்களை நாம் இழந்து நிற்கும் சூழலில் அம்மா வழியில் வரும் கழக அரசும் அம்மாவின் திட்டங்களை மக்களுக்கு வழங்குவதில் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தாய்மார்களுக்காக வாழ்ந்து அவர்கள் வளம்பெற நித்தமும் திட்டங்களை தீட்டியவர் அம்மா. அதனால் தான அம்மாவை மக்கள் தெய்வமாக பார்க்கிறார்கள். ஒரு மனிதன் பிறக்கும் காலம் முதல் இறக்கும் காலம் தொட்டு அம்மாவின் திட்டங்கள் சென்று அடைகிறது.

குறிப்பாக கடந்த காலங்களில் ரூ. 12 ஆயிரமாக இருந்த கர்ப்பகால நிதியை 18 ஆயிரமாக உயர்த்தினார். அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுகொள்ளும் தாய்மார்களுக்கு பவுடர், ஷாம்பு, லேகியம் நகவெட்டி உட்பட 18 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று பள்ளி படிக்கும் பருவத்தில் மாணவ மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகம் உட்பட14 வகையான பொருட்கள், தொலைதூரம் செல்லும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி மிதிவண்டி, உள்ளங்கையில் உலகத்தை அடக்கும் மடிகணினி, அவர்கள் திருமண காலங்களில் திருமண நிதி உதவி என எண்ணற்ற திட்டங்களால் அம்மா அவர்கள் மக்களின் மனதில் நீக்கமற நிறைந்துள்ளார்.

இதே போன்று முதியோர் உதவித்தொகை மூலம் 1000 வாங்கும் ஏழை தாய்மார்கள் தங்களின் உணவு தேவைகளை 500 ரூபாயில் முடித்துக்கொண்டு மற்ற செலவுகளுக்கு மீதி பணத்தை வைத்துக் கொள்கின்றனர். அரசின் திட்டங்கள் அனைத்தும் கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்படுகிறது. வெகுதூரம் பணிக்கு செல்லும் பெண்களின் நலன் கருதி அம்மா அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி இன்று அம்மாவின் வழியில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க ஆண்டுதோறும் 1 லட்சம் தார்மார்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை பிரதமர் துவங்கி வைத்து இன்று ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி பெண்களுக்காகவே திட்டங்கள் தீட்டி அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பெண்களுக்கான முதலமைச்சராக அம்மா திகழ்ந்தார். எனவே தாய்மார்கள் கழக அரசுக்கு எப்போதும் துணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பார்த்திபன், வட்ட பிரதிநிதி முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்ட செயலாளர் கே.பிரதாபன் செய்திருந்தார்