விளையாட்டு

ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் – இந்திய வீரர் சவுரப் வர்மா ‘சாம்பியன்’…

ஐதராபாத்:-

ஐதராபாத் ஓபன் பேட்மிண்டனில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரப் வர்மா, சிங்கப்பூர் வீரர் லோ கியான் யேவை சந்தித்தார். 52 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் தேசிய சாம்பியனான சவுரப் வர்மா 21-13, 14-21, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான சவுரப் வர்மா ‘சூப்பர் 100 வகை’ பேட்மிண்டனில் வென்ற 3-வது பட்டம் இதுவாகும்.இதன் பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா- சிக்கி ரெட்டி ஜோடி 17-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் கொரியாவின் பாக் ஹா நா- ஜங் கியங் இன் இணையிடம் வீழ்ந்தது.