தற்போதைய செய்திகள்

ஓசூர் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – கழக வேட்பாளர் கே.பி.முனுசாமி உறுதி…

கிருஷ்ணகிரி:-

ஓசூர் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று கழக வேட்பாளர் கே.பி.முனுசாமி உறுதி அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சிக்குட்பட்ட ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி பாரதிதாசன் நகர் தின்னூர், 100 அடி சாலை, தர்கா, அரசநாட்டி, லால், நேதாஜிநகர்,மற்றும் எலசிகிரி.காமராஜ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் கே.பி.முனுசாமி இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் ஓசூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஜோதிபாலகிருஷ்ண ரெட்டி வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தார்

வாக்குசேகரிப்பின்போது கழக வேட்பாளருக்கு வாக்காளர்கள் வரவேற்பு அளித்தனர்். அப்போது நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் கே.பி.முனுசாமி பேசுகையில், நான் வெற்றி பெற்றதும் ஓசூர் மக்களின் நீண்ட நாள் கனவான ஓசூர் முதல் கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டை வரையிலும் ரயில் இயக்கப்படும். கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரையில் இயக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ஓசூர் மக்களின் குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இந்த வாக்குசேகரிப்பின் போது மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஸ்ரீதர் அசோகர் ரெட்டி, கணேஷ், ரமேஷ் முரளி நாராயண ரெட்டி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஓசூர் நகர கழக செயலாளர் நாராயணன், சக்திவேல், வாசுதேவன், தனுஷ்கோடி, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.