விளையாட்டு

ஓய்வு எப்போது? – மவுனம் கலைத்த கேப்டன் தோனி…

ஓய்வு முடிவு தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மவுனம் கலைத்தார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனியின் செயல்பாடுகளும், ஆட்டத் திறன்களும் விமர்சனத்திற்குள்ளாகின. தோனி ஓய்வு பெறப் போவதாகவும், இந்த உலகக்கோப்பைத் தொடர் தான் அவர் விளையாடும் கடைசித் தொடராக இருக்கக் கூடும் எனவும் தகவல்கள் பரவின. இலங்கைக்கு எதிராக இந்திய அணி இன்று விளையாடும் போட்டிக்குப் பின்னர், தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஓய்வு முடிவு தொடர்பாக பேசியுள்ள தோனி, தான் எப்போது ஓய்வு பெறுவேன் என்பது தனக்கே தெரியாது என்று தெரிவித்துள்ளார். இலங்கை போட்டிக்கு முன்னதாகவே தாம் ஓய்வு பெற வேண்டும் என்று பெரும்பாலானோர் விரும்புவதாகவும் தோனி குறிப்பிட்டுள்ளார். ‘பெரும்பாலானோர்’ என்று தாம் குறிப்பிட்டு இருப்பது இந்திய கிரிக்கெட் அணியையோ அல்லது பயிற்சியாளர்களையோ அல்ல என்று தோனி விளக்கம் அளித்துள்ளார்.