ராமநாதபுரம்

கச்சத்தீவு அருகே மீனபிடித்த 7 தமிழக மீனவர்கள் கைது…

ராமேஸ்வரம்:-

கச்­சத்தீவு அருகே மீன்­பிடித்துக்­ கொண்­டிருந்த தமிழக மீன­வர்­கள் 7 பேரை இலங்கை கடற்­படை கைது செய்­தது.

ராமே­ஸ்­வ­ரம் கட­லோ­ரப்­ப­குதிகளில் கடந்த 10 நாட்­க­ளாக சூறா­வ­ளிக்­காற்று மற்­றும் கடல்கொந்­த­ளிப்பு கார­ண­மாக ராமே­ஸ்­வ­ரம், பாம்­பன், மண்­ட­பம் பகுதி­யைச் சேர்ந்த விசைப்­ப­டகு மீன­வர்­கள் கடலுக்குள் மீன்­பிடிக்­கச் செல்­ல­வில்லை. இந்நிலை­யில் நேற்று கடல் கொந்­த­ளிப்பு குறைந்­த­தால் ராமே­ஸ்­வ­ரத்தில் இருந்து 517 படகுகளில் 3 ஆயி­ரம் மீன­வர்­கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். கச்­சத்தீவு அருகே மீன்­பிடித்துக்­ கொண்­டிருந்த மீன­வர்­களை இலங்கை கடற்­படை விரட்­டியடித்­தது.

மேலும் ஒரு படகில் மீன்­பிடித்துக்­ கொண்­டிருந்த தங்­கச்சிமடத்­தைச் சேர்ந்த கிசிங்­கர், இன்­னாசி, நெல்­சன், வில்­லர் உள்­பட 7 மீனவர்களை கைது செய்து, விசைப்­ப­டகுகள் மற்றும் வலைக­ளையும் பறிமுதல் செய்­த­னர். பின்­னர் கைதான 7 மீன­வர்­க­ளையும் இலங்கை கடற்­படை காங்­கே­சன் துறை­முகத்திற்கு கொண்டு வந்து நீதிபதி முன்பு ஆஜர்­ப­டுத்தி பின்­னர் சிறை­யில் அடைத்­த­னர். 10 நாட்­க­ளுக்குப்பிறகு மீன்­பிடிக்­கச் சென்ற மீன­வர்­களை இலங்கை கடற்­படை விரட்­டியடித்­த­தால் மீன­வர்­கள் கவ­லையில் உள்­ள­னர்