தற்போதைய செய்திகள்

கடந்த ஓராண்டில் 69 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு அமைச்சர் நிலோபர்கபில் தகவல்…

சென்னை:-

கடந்த ஓராண்டில் 69 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர் என்று அமைச்­சர் நிலோ­பர்கபில் தெரிவித்துள்ளார்.

குழந்தை தொழி­லாளர் முறை எதிர்ப்பு தினத்­தையொட்டி தொழி­லாளர் துறை சார்­பில் சென்னை டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையத்­தில் பள்ளி குழந்­தை­க­ளு­டன் மெட்ரோ தொடர்­வண்டி விழிப்­பு­ணர்வு பயணம் நடைபெற்­றது. இதில் 250 பள்ளி மாணவர்­க­ளு­டன் தொழி­லாளர் நலத்­துறை அமைச்­சர் நிலோ­பர்கபில், நடி­கர் விஜய்ஆண்­டனி உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர்.

சென்னை தேனாம்­பேட்டை டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையத்­தில் இருந்து விமான நிலைய மெட்ரோ வரை மாணவர்­க­ளு­டன் அமைச்­சர் நிலோ­பர்கபி­லும், நடி­கர் விஜய் ஆண்­ட­னி­யும் மெட்ரோ ரயி­லில் பயணம் செய்­த­னர் . பின்­னர் செய்­தி­யாளர்­களை சந்­தித்த அமைச்­சர் நிலோ­பர் கபில் ­கூ­றுகையில், தமி­ழ­கத்­தில் கடந்த ஓர் ஆண்­டில் மட்­டும் 69 குழந்தை தொழிலாளர்கள் மீட்­கப்­பட்­ட­னர். குழந்­தை­களை பணி­யாளராக வைத்­தி­ருந்த 11 தொழிற்­சாலை­க­ளுக்கு சீல் வைக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.