தற்போதைய செய்திகள்

கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஏழுமலை வெற்றி பெறுவார் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உறுதி…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஆரணி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளு மன்ற தொகுதி கழக வேட்பாளராக தற்போதைய எம்பி-செஞ்சி சேவல் வெ.ஏழுமலை அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் செய்யாறு சட்ட மன்ற தொகுதி சார்பில் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் ஆகியோர் வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை அறிமுகம் செய்து வைத்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசுகையில், அம்மா அவர்களின் அருளாசியுடன், முதல்வர், துணை முதல்வர், கூட்டணி கட்சி தலைவர்களின் நல்லாசியுடன் ஆரணி நாடாளு மன்ற வேட்பாளராக செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை அறிவித்துள்ளனர் . இவரை கடந்த தேர்தலில் சுமார் 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தோம். தற்போது அதே போல் கழகப்பணியாற்றி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்றார்.

தூசி கே.மோகன் எம்.எல்.ஏ பேசுகையில், கழக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை தற்போது எம்.பியாக உள்ளார். இவர் தனது நாடாளுமன்ற நிதியிலிருந்து செய்யாறுக்கு ஏராளமான பணிகளை செய்துள்ளார். கடந்த தேர்தலில் வெற்றி பெற செய்தது போல் இந்த தேர்தலிலும் அம்மாவின் நல்லாசியுடன் கழக அரசின் சாதனைகளை கூறி அவரை வெற்றி பெற செய்யவேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை பேசும் போது, அம்மாவின் ஆன்மா சாந்தியடையும் வகையில் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். கடந்த தேர்தலில் நம் கழகம் தனித்து நின்றபோது 2,43,844 வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்தீர்கள் தற்போது நம்மிடம் பாஜாக, பா.ம.க, தே.மு.தி.க, புதியநீதிகட்சி, தமிழ்மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணி அமைத்திருக்கிறோம். ஆகையால் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வே.குணசீலன், ஒன்றிய மாணவரணி செயலாளர் எம்.விமலா மகேந்திரன், சுகர்மில் தலைவர் தூசி கே.குமரேசன், நகர செயலாளர் ஜனார்த்தனம், வெங்கடேசன், பூக்கடை கோபால், கோவிந்தராஜ், எஸ்.திருமூலன், டி.பி.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.