தமிழகம்

கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்…

சென்னை:-

வெப்பச் சலனத்தால் அடுத்த இரு தினங்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் மழைக்கு சாதகமான சூழல் இல்லை. கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இல்லை.