கன்னியாகுமரி

கடல் சீற்றத்தால் 15 ஆயிரம் படகுகள் கடற்கரையில் நிறுத்தம் – 40 ஆயிரம் மீனவர் கடலுக்கு செல்லவில்லை…

கன்னியாகுமரி:-

கடல் சீற்றம் நீடிப்பதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தப் பட்டுள்ளன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

தென்கிழக்கு வங்கக் கடலில்உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுப் பெற்று தமிழக கடல் பகுதியை நோக்கி நகரவுள்ளது. இதன் காரணமாக நாளை (28-ம் தேதி) கடல் சீற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் சின்னம் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் கடந்த3 நாட்களாக கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. குளச்சல், குறும்பனை, அழிக்கால், தேங் காய்பட்டணம், பூத்துறை, வள்ளவிளை, நித்திரைவிளை, பொழிக்கரை, மண்டைக்காடு புதூர் ஆகிய கடலோர பகுதிகளில் உயரமாக எழுந்த அலைகள் ஊருக்குள் புகுந்ததால் அங்கு வசிக்கும் மீனவ குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடியப் பட்டணத்தில் கடற்கரை ஓரம் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஏற்கெனவே, கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் இம்மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் மீன்பிடிதுறைமுக தளத்தில் நிறுத்தப்பட் டுள்ளன. மேற்கு கடல் பகுதியில் ஆழ்கடலுக்கு சென்றுள்ள விசைப்படகுகள் கரை திரும்புமாறு மீன்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தகவல் கிடைத்த விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.

வரும் 29-ம் தேதி வரை மீனவர் கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், இம்மூன்று மாவட்டங்களிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் முடங்கியுள்ளனர்.