விழுப்புரம்

கண்டமங்கலம் ஒன்றிய கழகம் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்…

விழுப்புரம்:-

கண்டமங்கலம் ஒன்றிய கழகம் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் வடக்கு மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றிய கழகம் சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கோண்டூர் கூட்டுரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கண்டமங்கலம் ஒன்றியக் கழகச் செயலாளர் கே.இராமதாஸ் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.எஸ். முருகன் ,ஒன்றிய பேரவை பொருளாளர் கே.ஏழுமலை, தாக்கம் ஊராட்சிக் கழகச் செயலாளர் ஆறுமுகம், ஆகியோர் துவக்க உரை ஆற்றினர்.

மாவட்ட பிரதிநிதி முருகசாமி , ஊராட்சிக் கழகச் செயலாளர் ஆர்.சந்திரசேகர், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பி.எஸ்.வேலூர், முன்னாள் மாவட்ட பிரதிநிதி முருகசாமி, ஊராட்சி கழக செயலாளர் விஜயகுமார், ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஸ்ரீதர், தர்மன் ,லதா, திருமலை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கல்யாணி ராஜாமணி ,தர்மன், ஒன்றிய துணைச் செயலாளர் சி.ஆர்.ஏழுமலை, ஒன்றிய துணைச் செயலாளர் சி.ஆர்.ஏழுமலை, ஒன்றிய இளைஞரணி செயலாளர் டி.சவுரிராஜன், ஒன்றிய மாணவரணி செயலாளர் ஏழுமலை, கிளைச் செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய பேரவை துணைச் செயலாளர் கணேஷ் ,தளபதி குமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் வானூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.சக்கரபாணி, கண்டமங்கலம் முன்னாள் ஒன்றிய செயலாளர் எல்.கே.கண்ணன் ஆகியோர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளரும், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக இணைச் செயலாளருமான நூர்ஜகான் சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் கவுரி பாலகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சேகர், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கே.பாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், கண்டமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, தென்னல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெங்கடாஜலபதி, கொடுக்கூர் விஜயன், ஒன்றிய துணைச்செயலாளர் அமுதா நடராஜன், கோட்டூர் பாண்டுரங்கன் மற்றும் மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கோண்டூர் ஊராட்சி செயலாளர் முனியசாமி நன்றி கூறினார்